*ஒவ்வொரு நிமிடமும்
புதிதாய் பிறந்து கொண்டிருந்தேன்...
உன் காதலில் விழுந்ததில் இருந்து..!!
ஒவ்வொரு நிமிடமும்
இறந்து கொண்டிருக்கிறேன்...
உன் காதலை இழந்ததில் இருந்து..!!!
*நித்தம் நூறு ஜனனம் தந்து
தாய் ஆனாய் அன்று..!!
நித்தம் நூறு மரணம் தந்து
எமனாகிறாய் இன்று..!!!
*என் விழுதகளுக்கும் நீரூற்றி
வளர வைத்த நீதான்..
இன்று என் வேர்களுக்கும் வென்னீரூற்றி
தளர வைக்கிறாய்..!!
*எப்போதும் உன் சந்தோஷம் வேண்டும்
எனக்கு என்பாயே..
அதனால்தான் அதை உன்னுடன்
கொண்டு சென்றுவிட்டாயோ..!!
*பிடித்திருந்த காதலனின் கரத்தை உதறி
இன்னொரு கரத்தைப் பற்றலாம் காதலி..!!
பிடித்திருக்கும் தாயின் கரத்தை உதறி
இன்னொரு தாயின் கரம் தேடுமோ குழந்தை..!!!
*நான் காதலனாய் உன் மாராப்பு விலகலுக்கு
காத்திருந்ததை விடவும்..
ஒரு சேயாய் உன் மாருடனான அணைப்புக்கு
காத்திருந்ததுதானே அதிகம்..!!!
*உனக்காக எழுதிய கவிதைகளும்..
உன்னிடம் பெற்ற முத்தங்களும்..
இன்னும் முந்நூறு யுகங்கள்
நினைவிலிருக்குமே..
ஒரு நிமிடம் யோசித்து சொல்..
உன் தண்டனைக்கு தக்க
குற்றவாளிதானா நான்..??!!
-இளவேந்தன் சேரன்.
புதிதாய் பிறந்து கொண்டிருந்தேன்...
உன் காதலில் விழுந்ததில் இருந்து..!!
ஒவ்வொரு நிமிடமும்
இறந்து கொண்டிருக்கிறேன்...
உன் காதலை இழந்ததில் இருந்து..!!!
*நித்தம் நூறு ஜனனம் தந்து
தாய் ஆனாய் அன்று..!!
நித்தம் நூறு மரணம் தந்து
எமனாகிறாய் இன்று..!!!
*என் விழுதகளுக்கும் நீரூற்றி
வளர வைத்த நீதான்..
இன்று என் வேர்களுக்கும் வென்னீரூற்றி
தளர வைக்கிறாய்..!!
*எப்போதும் உன் சந்தோஷம் வேண்டும்
எனக்கு என்பாயே..
அதனால்தான் அதை உன்னுடன்
கொண்டு சென்றுவிட்டாயோ..!!
*பிடித்திருந்த காதலனின் கரத்தை உதறி
இன்னொரு கரத்தைப் பற்றலாம் காதலி..!!
பிடித்திருக்கும் தாயின் கரத்தை உதறி
இன்னொரு தாயின் கரம் தேடுமோ குழந்தை..!!!
*நான் காதலனாய் உன் மாராப்பு விலகலுக்கு
காத்திருந்ததை விடவும்..
ஒரு சேயாய் உன் மாருடனான அணைப்புக்கு
காத்திருந்ததுதானே அதிகம்..!!!
*உனக்காக எழுதிய கவிதைகளும்..
உன்னிடம் பெற்ற முத்தங்களும்..
இன்னும் முந்நூறு யுகங்கள்
நினைவிலிருக்குமே..
ஒரு நிமிடம் யோசித்து சொல்..
உன் தண்டனைக்கு தக்க
குற்றவாளிதானா நான்..??!!
-இளவேந்தன் சேரன்.
No comments:
Post a Comment