* என்னிடம் நீ
தந்து விட்டு போன காதல்
நினைவுகள் தான்...
இந்த ஜென்மத்தில்
என் பிறப்பிற்கும்..
என் இறப்பிற்கும் ..
அர்த்தம் தருகிறது நித்தம்....
* என் காதலாலும்..
என் கவிதைகளாலும்..
அலங்கரிக்கப்பட்டவளே ...
ஒருமுறையேனும் உனக்காக
எழுதப்பட்ட என் கவிதைகள்..
உன் கண்ணில் படும் எனில்..
என் எழுத்துக்கள் உயிர் பெறும்..
என் இதயம் நிறைவுடன் உயிர்விடும்..
-இளவேந்தன் சேரன்.
No comments:
Post a Comment